பிரதேச செயலகத்திற்கான கட்டட அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Report Print Navoj in அபிவிருத்தி

வாழைச்சேனை ஓட்டமாவடி மேற்கு பிரதேச செயலகத்திற்கான புதிய செயலகக் கட்டடத்திற்க்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை காகிதநகர் அருகாமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேயவர்த்தன கலந்து கொண்டதுடன், அதிதிகளாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹீர் மௌலானா, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட், அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், கைத்தொழில் வர்த்தக அமைச்சின் ஆலோசகர் எஸ்.கணேசமூர்த்தி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இப் பிரதேச செயலக கட்டடத்திற்காக 80 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது, அத்தோடு இதற்கான நிலப்பரப்பை கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழுள்ள காகித ஆலை நிலப்பரப்பில் இருந்து மூன்று ஏக்கர் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலே முதன் முறையாக அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக அமையவுள்ளதுடன், 2017ம் ஆண்டு இறுதிப் பகுதியில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் திறந்து வைக்கப்படவுள்ளதாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

Latest Offers

loading...

Comments