ஒருங்கிணைப்புக் கூட்டங்களை நடத்த நெறிமுறைகள் அறிவிப்பு

Report Print Rakesh in அபிவிருத்தி

மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை ஒவ்வொரு மாதமும் நடத்துமாறு ஜனாதிபதி செயலகத்தினால் சகல மாவட்டச் செயலர்களுக்கும் சிறப்புச் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு எஞ்சியுள்ள மாதங்களிலும், அடுத்த ஆண்டும் எந்தத் தினங்களில் கூட்டம் நடத்த வேண்டும் என்ற திகதியும் குறிப்பிடப்பட்டு இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் சீராக நடத்தப்படுவதில்லை. ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களின் நேர ஒதுக்கீட்டில் இழுபறி ஏற்படுவதால் இதனை ஒழுங்காக நடத்த முடியாமல் இருப்பதாக கடந்த காலங்களில் அதிகாரிகள் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் ஜனாதிபதி செயலகத்தினால், சகல மாவட்டச் செயலர்களுக்கும் சிறப்பு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் எப்போது நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமையிலும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் ஒவ்வொரு மாதத்தின் கடைசி திங்கட்கிழமையிலுமே நடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இந்த மாதம் 26ஆம் திகதியும், ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதியும், நவம்பர் மாதம் 28ஆம் திகதியும், டிசம்பர் மாதம் 26ஆம் திகதியும் நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதியும், நவம்பர் மாதம் 7ஆம் திகதியும், டிசம்பர் மாதம் 5ஆம் திகதியும் நடத்தி முடிக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...

Comments