சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!

Report Print Murali Murali in அபிவிருத்தி

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11.8 சதவீதத்தினால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் புள்ளிவிவரங்கள் அறிவித்துள்ளன.

இதன்படி இந்த கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு லட்சத்து 86 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 16 சதவீதத்தால் அதிகரித்து 13 லட்சத்து 56 ஆயிரமாக பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, மேற்கு ஐரோப்பாவிலிருந்து 4 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் சுற்றுலாப் பயணிகளாக வருகை தந்துள்ளனர்.

அத்துடன் தெற்காசியாவிலிருந்து 3 லட்சத்து 20 ஆயிரம் சுற்றுலாப்பயணிகளும், கிழக்கு ஆசியாவிலிருந்து 2 லட்சத்து 91 ஆயிரம் சுற்றுலாப்பயணிகளும் வருகை தந்திருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...

Comments