வைத்தியசாலை கட்டடத்திறப்பு தொடர்பில் ஜனாதிபதியை சந்திக்க வாய்ப்பு

Report Print Vino in அபிவிருத்தி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூலமாக ஜெய்கா திட்டத்தின் கீழ் 514 மில்லியன் ரூபாய் செலவில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தினை திறந்து வைப்பதற்கான ஆயத்தங்கள் ஆரம்பமாகியுள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை புதிய கட்டடத்தினை திறந்து வைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்குரிய நேரத்தினை மாகாண ஆளுநர் ஏற்படுத்தி தந்திருக்கின்றார் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் A.L.M. மொகமட் நசீர் தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவின் விசேட அழைப்பின் பேரில் வருகை தந்த மாகாண சுகாதார அமைச்சர் 514 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தினை பார்வையிட்டார்.

மேலும் வைத்தியசாலையினுடைய குறைபாடுகள், ஆளணிப்பற்றாக்குறை ஆகியவற்றைக் கேட்டறிந்து, புதிய கட்டடத் திறப்பு விழாவிற்கு கலந்து கொள்ளவுள்ள ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன மற்றும் சுகாதார அமைச்சின் உயரதிகாரிகள் மூலமாக இவ் வைத்தியசாலைக்கு தேவையான மேலதிக வளங்களைப் பெற்றுத்தருவதாகவும் கூறியிருந்தார்.

அம்பாறை மற்றும் மட்டக்களப்பிலுள்ள மக்கள் இவ் வைத்தியசாலை மூலம் மேலும் நன்மை அடைவார்கள் என குறிப்பிட்ட அமைச்சர், விரைவில் இவ் வைத்திய சாலைக்கு புதிய வைத்திய நிபுணர்கள், மருந்தாளர்கள், ஆய்வுடகூட தொழிநுட்பவியலாளரகள் நியமிக்கப்பட்டு விரைவில் மாகாண பொது வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இவ் விசேட சந்திப்பில் வைத்தியசாலையினுடைய வைத்தியட்சகர் டாக்டர்.கு.சுகுணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகசபை களுவாஞ்சிகுடி நகரின் தலைவர் அ.கந்தவேல் மற்றும் வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் வைத்தியசாலை உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers

loading...

Comments