ஹம்பாந்தோட்டை விவசாய, மீன்பிடியாளர்களுக்கு இந்தியா வாழ்வாதார உதவி

Report Print Ajith Ajith in அபிவிருத்தி
52Shares

ஹம்பாந்தோட்டை மாவட்ட விவசாய மற்றும் மீன்பிடியாளர்களின் வாழ்வாதார திட்டங்கள் தொடர்பில் இந்தியாவும் இலங்கையும் இன்று உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

இந்த உடன்படிக்கை, இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே சிங்ஹா மற்றும் மீன்பிடித்துறை அமைச்சின் செயலாளர் திருமதி அதிகாரி ஆகியோருக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டது. இதன்போது மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவும் பிரசன்னமாகியிருந்தார்.

இந்த உடன்படிக்கையின்கீழ் ஹம்பாந்தோட்டை விவசாய மற்றும் மீன்பிடியாளர்களுக்கு சைக்கிள்கள், உயிர்க்காப்பு அங்கி, தையல் இயந்திரங்கள் உபகரணங்கள், 300 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் வழங்கப்படவுள்ளன.

இதன்மூலம் மாவட்டத்தில் 75 ஆயிரம் பேர் நன்மை பெறவுள்ளனர்.

Comments