மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாத வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

Report Print Kumar in அபிவிருத்தி

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட களுவன்கேணி பிரதான வீதியை ஒரு கோடி ரூபா செலவில் புனரமைக்கும் பணிகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சிடம் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் விடுத்த கோரிக்கையின் பேரில் இதன் புனரமைப்பு பணிக்கான நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மிக நீண்ட காலமாக இப்பகுதி புனரமைக்கப்படாதததன் காரணமாக இப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

இந்த வீதியை புனரமைத்து தருமாறு இப்பகுதி மக்கள் கடந்த காலங்களில் ஆர்ப்பாட்டங்களையும் நடாத்தியுள்ள நிலையில் நேற்று இந்த வீதியை புனரமைப்பதற்கான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகள்,கிராம முக்கியஸ்தர்கள் உட்பட பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.

Latest Offers

loading...

Comments