நடைபாதைகளாக மாற்றப்பட உள்ள யாழ் வீதி

Report Print Vino in அபிவிருத்தி

புல்லுக்குளம் பகுதியில் இருந்து யாழ் பொது நூலகத்திற்கு செல்லும் வைத்தியலிங்கம் வீதி நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. எனினும் எதிர்வரும் காலங்களில் அவ் வீதி நடைபாதையாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசினுடைய நிதி உதவியில் யாழ் கலாச்சார நடுவண் நிலையம் யாழ் பொது நூலகத்திற்கு அருகில் அமைக்கப்படவுள்ளமை தொடர்பான அறிவித்தல் கடந்த மாதம் யாழ்.மாநகர சபையினால் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கலாச்சார நடுவண் நிலையம் இலங்கை மதிப்பில் 1.7 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலையத்தின் கட்டட வேலையாட்கள் தங்குவதற்குரிய கூடாரங்கள் அமைக்கபட உள்ளமையினால் இந்த வீதி மூடப்படுவதாகவும், கலாச்சார நடுவண் நிலையம் அமைக்கப்பட்ட பின்னர் மேற்படி வீதியினூடாக வாகனப் போக்குவரத்து முற்றாக தடைசெய்யப்பட்டு பாதசாரிகள் நடைபாதையாக மாற்றப்படவுள்ளது.

மேலும் புல்லுக்குள பகுதியில் திறந்தவெளி அரங்கம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...

Comments