மதுபான கலவை தொடர்பான கருத்தரங்கும் போட்டியும்

Report Print Navoj in அபிவிருத்தி

பாசிக்குடாவில் உள்ள ஹோட்டலில் கடமை புரிபவர்களுக்கு மதுபான கலவை தொடர்பான கருத்தரங்கும், போட்டி நிகழ்ச்சியும் பாசிக்குடா அனந்தயா ரிசோட்டில் இடம் பெற்றது.

24ஆவது தேசிய சவால் கலவை 2016ஐ முன்னிட்டு குறித்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மதுபான கலவை தொடர்பான கருத்தரங்கு காலையிலும், பிற்பகல் அது தொடர்பான போட்டி நிகழ்ச்சியும் இடம் பெற்றதுடன், இதில் பாசிக்குடாவிலுள்ள எட்டு ஹோட்டல்களில் இருந்து 15 பேர் கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டியில் தெரிவு செய்யப்பட்ட ஆறு பேர் அகில இலங்கை ரீதியில் நடைபெறும் கலவை (Cocktail) போட்டியில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த நிகழ்வின் வளவாளராக ஜோசப் கெனி கலந்து கொண்டு கலவை தொடர்பாக விளக்கங்கள் மற்றும் செயன்முறை தொடர்பாக தெளிவுபடுத்தினார்.

மேலும், நிகழ்வின் நடுவர்களாகவும், அதிதிகளாகவும் வைன், ஸ்பிரிட் தொடர்பான கல்வி வழங்குனர்களான ஜோசப் கெனி, ஜயந்த குணசேகர, தம்மிக்க குணதிலக, பாசிக்குடா அனந்தயா ஹோட்டல் வதிவிட முகாமையாளர் தம்மிக விக்ரமநாயக்க, மற்றும் ஹோட்டல்களின் முகாமையாளர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை சுதந்திர இலங்கை வியாபார நிறுவனம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...

Comments