கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சரினால் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

Report Print Rusath in அபிவிருத்தி
33Shares

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் தலைமையில் நாளை(09) ஏறாவூரில் 34 கோடி ரூபா பெறுமதியான அபிவிருத்திப் பணிகள் அடிக்கல் நாட்டும் வைபவத்துடன் ஆரம்பிக்கப்பட உள்ளன.

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீமின் நிதியொதுக்கீட்டிலும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் நிதியொதுக்கீட்டிலும் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஏறாவூரில் நீண்ட காலமாக முறையான பொதுச் சந்தையொன்று இல்லாத வர்த்தகர்கள் தமக்கு பொதுச் சந்தையொன்று அமைத்துத் தர வேண்டுமென முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

இந்த அபிவிருத்தி முயற்சிகளை தடுப்பதற்கு பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதும் தற்போது மக்களுக்கான பணிகள் தடையின்றி முன்னெடுக்கப்படுகின்றன.

அத்துடன் கலாச்சார மையம் மற்றும் நூலக கட்டடம் என்பவற்றுக்காக 12 கோடி ரூபாவும் பெண்கள் சந்தைக்கான நிர்மாணப் பணிகளுக்கு 2 கோடி ரூபாவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணம் முழுவதும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் பல்வேறு சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments