யாழில் வடமாகாணத்தின் மீன்பிடி அபிவிருத்திக்கான இணைய முகாமைத்துவ செயற்பாடு தொடர்பான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று(08) டில்கோ ஹோட்டலின் தனியார் விடுதியில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் கலந்து கொண்டு இத் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.
குறித்த இணைய முகாமைத்துவ செயற்பாடு எதிர்வரும் 05 ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.