இலங்கையில் பாடத்திட்டங்கள் நவீன வடிவம் பெறவுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஒன்பதாம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களுக்கு பதிலாக ஐ-பேட் இலத்திரனியல் சாதனம் வழங்கப்படும் என நாடாளுமன்றில் இன்று அறிவித்தார்.
இந்த வகுப்புக்களுக்கு உரித்தான பாடவிதானங்களை உள்ளடக்கிய ஐ-பேட் இயந்திரங்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பாடல், டிஜிட்டெல் தொழில்நுட்பம் தொடர்பான அமைச்சுக்கான குழுநிலை விவாதம் நாடாளுமன்றில் இன்று நடைபெற்றது. விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.