உள்ளுர் குடிநீர் விநியோகத்துக்கு அமெரிக்காவின் பங்கு...

Report Print Ajith Ajith in அபிவிருத்தி
60Shares

இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன ஆகியோரினால் முன்னெடுக்கப்பட்டுள்ள 150 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டிலான குடிநீர் திட்டத்தில் அமெரிக்க அரசாங்கமும் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

2012ஆம் ஆண்டு முதல் யு.எஸ்.எய்ட் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற குடிநீர் திட்டத்தின் விரிவாகமாகவே இந்த திட்டம் அமைவதாக அமரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது

இந்தநிலையில் இலங்கையர்களின் குடும்பங்கள் நாளாந்த எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வை காண அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அமரிக்காவின் தூதுவர் அடுல் கெசாப் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின்கீழ் மழைநீரை தேக்கிவைக்கும் தாங்கிகள் அமைப்பு, குடிநீருக்கு குழாய் பொருத்தல், வெள்ளம் மற்றும் வெப்பமான காலநிலையின்போது பாதிப்புக்களை குறைப்பதற்காக அடித்தள வசதிகள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நீரிழிவுநோயை கட்டுப்படுத்தும் திட்டத்துக்கும் உதவுவதே தமது நோக்கம் என்றும் கெசாப் குறிப்பிட்டுள்ளார்.

Comments