வெள்ளிமலை உள்ளக வீதிகளுக்கான வேலைத் திட்டம் ஆரம்பம்

Report Print Ashik in அபிவிருத்தி
63Shares

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச சபைக்கு உட்பட்ட வெள்ளிமலை கிராமத்தின் 6 கிலோ மீட்டர் தூரமுடைய உள்ளக வீதிகளுக்கான கிரவல் போடும் வேலைத் திட்டம் இன்று(10) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வெள்ளிமலை கிராமத்தில் சுமார் 250 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிரந்தரமாக வசித்து வருகின்றனர். மழைக்காலங்களில் உள்ளக வீதிகளுக்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டு மாணவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாதசாரிகள் பல சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.

குறித்த பிரச்சினை தொடர்பில் வெள்ளிமலை அபிவிருத்திக் குழு மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிளையினர் விடுத்த விசேட கோரிக்கையினை அடுத்து கடந்த மாதம் அமைச்சர் றிஷாட் பதியுதீன் இந்த வீதியின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

இதற்காக வெள்ளிமலை அபிவிருத்திக் குழு மற்றும் பள்ளி நிர்வாகம் அமைச்சருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.

Comments