யாழில் மூவாயிரம் மழைநீர் சேகரிப்புத் தாங்கிகள்..! இந்தியா இலங்கை கைச்சாத்து

Report Print Vino in அபிவிருத்தி
72Shares

யாழ்ப்பாண மாவட்டத்தில் 3000 மழைநீர் சேகரிப்புத் தாங்கிகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் இலங்கையும் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இலங்கையின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி முன்னிலையில், பதில் இந்தியத் தூதுவர் அரிந்தம் பக்சியும், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலர் சிவஞானசோதியும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான செயலகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்தியா குறித்த திட்டத்துக்காக 300 மில்லியன் ரூபாவை வழங்கவுள்ளது.

யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 3000 குடும்பங்களுக்கு மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைத்துக் கொடுக்கப்பட்டு அவர்களுக்குரிய பயிற்சிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள், பயனாளிகள் மற்றும் மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கும் வழங்கப்படவுள்ளன.

Comments