யாழ்ப்பாணக் குடாநாட்டில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை கிரிக்கெட் சபை இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இது தொடர்பில் இதற்கான இடத்தை கடந்த வாரம் ஆய்வு செய்தததாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
மைதானத்திற்கு இலகுவாக செல்வது, பாதுகாப்பு மற்றும் நலன்புரி காரணிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
மைதானத்தின் நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தை இலக்கு வைத்து பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனொரு கட்டமாக சர்வதேச கிரிக்கெட் மைதானம் உலகளாவிய ரீதியில் பேசப்படும் ஒன்றாக மாறும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.