சர்வதேச மயப்படுத்தப்படும் இலங்கையின் எதிர்காலம் தொடர்பான வரைபடம்!

Report Print Vethu Vethu in அபிவிருத்தி

இலங்கையின் எதிர்காலம் தொடர்பான வரைபடத்தை உலகப் பொருளாதார மன்றத்தின் கொள்கைகள் கற்கை நிறுவகம் சமர்ப்பித்துள்ளது.

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு புதிய தொழில்நுட்ப ஆரம்பத்தை பெற்றுக் கொள்வதற்கான நடைமுறை பற்றிய அடிப்படை விடயங்களை விளக்கும் வகையில் வரைபடம் அமைந்துள்ளது.

பொருளாதார செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லவும், அது தொடர்பான தகவல்களை வழங்கவும் இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கும்.

உலகப் பொருளாதார மன்றத்தின் விசேட கூட்டத்தில் இது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.

அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம, ஹரீன் பெர்னாண்டோ ஆகியோர் இதில் கலந்து கொண்டார்கள்.

Comments