வாகனங்களுக்கான கடன் அடிப்படையிலான குத்தகை திட்ட பெறுமதி வீதங்கள் இன்றுஅறிவிக்கப்பட்டுள்ளன.
2017ம் ஆண்டு வரவு செலவுத்திட்ட பரிந்துரைகளுக்கு அமையவே இந்த அறிவிப்பை நிதியமைச்சுவெளியிட்டுள்ளது.
இதன்படி, முச்சக்கர வண்டிகளுக்கு கடன் பெறுமதி 25 வீதமாக இருக்கும்.
மோட்டார் கார்கள் மற்றும் வான்களுக்கு 50 வீதமாக அது அமைந்திருக்கும்.
லொறி மற்றும் பஸ்களுக்கு இந்த கடன் பெறுமதி 90 வீதமாக இருக்கும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வட்டி வீதங்கள், சுற்றுலாத்துறையின் போக்குவரத்துக்காக வாகனங்களை குத்தகைக்குபெறுவோருக்கு பொருந்தாது. அவர்கள் 100 வீத குத்தகைக் கடனை பெறலாம்.