ஜி.எஸ்.பி.பெறுவது குறித்து ஆராய ஜனாதிபதி குழு நியமனம்!

Report Print Kamel Kamel in அபிவிருத்தி

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ள நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குழுவொன்றை நியமித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் இந்தக் குழு இயங்கவுள்ளது.

வரிச் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கான செயற்பாட்டு திட்டமொன்றை ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரை செய்துள்ளதாகவும் இது குறித்து ஆராயும் நோக்கில் ஜனாதிபதி குழுவினை நியமித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் குழுவினால் பரிந்துரைகள் குறித்து விரிவாக ஆராயப்பட உள்ளது.இந்த செயற் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் எவற்றை அமுல்படுத்த முடியும்,

எவற்றை அமுல்படுத்த முடியாது என்பது குறித்து ஆராய்ந்து அது குறித்து ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் பணியை பைசர் முஸ்தபா தலைமையிலான குழு மேற்கொள்ளவுள்ளது.

நிறைவேற்றப்பட முடியாத விடயங்கள் குறித்து எழுத்த மூலம் ஐரோப்பிய ஆணைக்குழுவிற்கு தெளிவுபடுத்தப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments