மலேசியாவின் "டுவின் டவர்" கொழும்பில்..!

Report Print Agilan in அபிவிருத்தி
112Shares

இலங்கையில் முதன் முதலாக கொழும்பில் 7 ஸ்டார் ஹோட்டல் ஒன்று மலேசியாவில் உள்ள (டுவின் டவர்) இரட்டை கோபுரத்தினை போன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.

அதி சொகுசு வசதியுடன் நிர்மாணிக்கப்படும் இந்த கட்டடத்தில் பெரிய அளவிலான கண்ணாடி பாலத்தினை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த 7 ஸ்டார் ஹோட்டல் அமைப்பதற்கு இன்று மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர இன்று அடிக்கல் நாட்டி வைத்தனர்.

மேலும் அந்த கட்டிடத்தின் உயரத்தில் உலங்கு வானூர்தி தரித்து நிற்பதற்கான வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த 7 ஸ்டார் ஹோட்டலை சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments