இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்தானிகர் குழு ஒன்று "நெடுந்தாரகையின் முதல் பயண நிகழ்விற்காக" இன்று காலை யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
அவுஸ்திரேலிய உயர்தானிகர் பிறைசி ஹட்ஸன் தலைமையிலான 10 பேர் அடங்கிய குழுவினர் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் யாழ் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் முதற்தடவையாக கொழும்பில் இருந்து புகையிரதம் ஊடாக பயணத்தினை மேற்கொண்டைமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள சமாதானம் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு செயற்பாடுகள் தொடர்பாக உரிய அதிகாரிகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடும் நோக்கில் அவர்கள் குறித்த பயணத்தை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த குழுவினர் யாழ் மாவட்டத்தில் உள்ள சிவில், சமூக,மற்றும் மீள்குடியேற்ற அமைப்புக்களுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.