கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் பைசர் முஸ்தபா

Report Print Suman Suman in அபிவிருத்தி
111Shares

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இன்று(19) இரணைமடு பிரதான வீதியில் அமைந்துள்ள பாலம் ஒன்றினை திறந்து வைத்துள்ளார்.

அத்துடன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றுக்கொண்டுள்ள நிலையில் கிளிநொச்சி இரணைமடுக் குளத்தினை சென்று பார்வையிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், மஸ்தான் வட மாகாண போக்குவரத்துத்துறை அமைச்சர் டெனீஸ்வரன் மாகாணசபை உறுப்பினர்களான

பசுபதிப்பிள்ளை, அரியரத்தினம், தவநாதன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் , கிளிநொச்சி பிராந்திய பிரதி நீா்ப்பாசன பணிப்பாளா் எந்திரி சுதாகரன் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிரந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments