வவுனியா நகரசபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீதி விளக்குகள் பொருத்தும் திட்டம்

Report Print Thileepan Thileepan in அபிவிருத்தி

வவுனியா நகரசபையினரால் நகரசபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றது.

வவுனியா நகர்புறங்களில் ஏற்கனவே வீதி விளக்குகள் பொருத்தப்பட்ட நிலையில் இன்று(22) புறநகர்ப்பகுதிகளில் வீதி விளக்குகள் பொருத்தும் நடவடிக்கையில் நகரசபை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த வீதி விளக்குகள் தாண்டிக்குளம், கோவில்குளம், பூந்தோட்டம் மற்றும் ஓயார் சின்னக்குளம் போன்ற பகுதிகளில் பொருத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த செயற்பாடு தொடர்பில் கருத்து தெரிவித்த நகரசபை செயலாளர் இ.தயாபரன், பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்க பல சிரமத்திற்கு மத்தியில் நகரசபை வீதி விளக்குகளை பொருத்தும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றது.

மின்சாரத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் பொதுமக்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். தங்கள் வீடுகளுக்கு முன் மின் கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள தெரு விளக்குகளை வீணாக எரிய விடாது காலக்கிரமத்தில் அணைக்க வேண்டும்.

இதன் காரணமாக மின்சாரத்தையும் கட்டணத்தையும் சேமிக்க முடியும் என்பதோடு நகர அபிவிருத்தியில் பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என நகரசபை செயலாளர் இ.தயாபரன் குறிப்பிட்டுள்ளார்.

Comments