12 தீர்மானங்களை கொண்டு 'நல்லூர் பிரகடனம்' செய்யப்பட்டது

Report Print Suthanthiran Suthanthiran in அபிவிருத்தி

வட கிழக்கு மாகாணங்கள் உட்பட இலங்கையில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் காணிகளை விடுவிக்ககோரி 12 தீர்மானங்களை கொண்ட 'நல்லூர் பிரகடனம்' செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் காணி உரிமையை வென்றெடுப்பதற்கான மக்கள் இயக்கத்தினால், நல்லூர் கந்தசுவாமி ஆலயம் முன்பாக இன்று மாலை 3.30 மணிக்கு செய்யப்பட்டுள்ளது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒழுங்கமைப்பில் காணி உரிமையை வென்றெடுப்பதற்கான மக்கள் இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இயக்கம் 12 கோரிக்கைகள் அடங்கியதாக தமது நல்லூர் பிரகடனத்தை இன்று செய்துள்ளது.

மாலை 3.30 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி ஆலயம் முன்பாக கூடிய மக்கள் இயக்கத்தினர் சமய வழிபாடுகளை மேற்கொண்டதுடன், தமது பிரகடனத்தை மேற்கொண்டனர்.

மேற்படி பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 12 கோரிக்கைகளாவன,

01. எமக்கு அவசியமான அடிப்படை வசதிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் பெற்றுக் கொடுக்கவேண்டும்.

02. எமக்கு சொந்தமான காணிகளை மீள எமக்கு கொடு.

03. எமக்கு எமது கடல் பிரதேசத்தை விட்டுக் கொடு.

04. எமக்கு எமது விளை நிலங்களை மீளக் கொடு.

05. எமது நிலங்களுக்கான உத்தியோகபூர்வ உரிமையை வழங்கு.

06. எமது பூர்வீக வாழ்விடங்களை எமக்கு மீளக் கொடு.

07. எமக்கு சொந்தமான வீடுகள் மற்றும் உடைமைகளை அழித்தது போன்றே மீளவும் அவைகளை கட்டியெழுப்பு.

08. எமது வீடுகளை பயன்படுத்திய வருடங்களுக்கான நஸ்டஈட்டை வழங்கு.

09. எமது பூர்வீக தொழில்களை மீள ஆரம்பிக்க எமக்கு சந்தர்ப்பம் வழங்கு.

10. எமது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும், எமது நம்பிக்கையை வெல்வதற்கும். எமக்கு கொடுத்த வாக்குறுதிகளை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

11. நாம் எமது காணி மற்றும் வாழ்வதற்கான உரிமையை வென்றெடுப்பதற்காக போராட்டங்களை நடத்தும்போது பாதுகாப்பு படையினர் மற்றும் உறவுத் துறையினரால் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்களை நிறுத்தி நாம் சுதந்திரமாக செயற்பட இடமளிக்கப்படவேண்டும்.

12. மேற் குறிப்பிட்டுள்ள உரிமைகளை வென்றெடுப்பதற்காக சகல மக்களையும் அழைக்கிறோம். மேலும் தமது உரிமைகள் வெல்லப்படும் வரையில் தொடர்ந்தும் போராட்டம் நடத்தப்படும் எனவும் காணி உரிமைகக்கான மக்கள் இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Latest Offers

Comments