யாழில் சிறப்பிக்கப்பட்ட கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு

Report Print Suthanthiran Suthanthiran in அபிவிருத்தி
97Shares

வடமாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களம் நடத்தும் “கிராமிய வளர்ச்சியே உயர்ச்சி” எனும் கருப்பொருளிலான கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வு யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

இதேவேளை இந்த நிகழ்வில் மாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா, அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், மாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஷ்வரன், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments