கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஆரம்பம்

Report Print Yathu in அபிவிருத்தி

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்கள் தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் இணைத் தலைமையில் இந்த கூட்டம் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், துறைசார் திணைக்கள அதிகாரிகள், அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை குறித்த கலந்துரையாடலில் சில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிட்டத்தக்கது.

Latest Offers