லயன்ஸ் கழகத்தினால் நடாத்தப்பட்ட இலவச கண் பரிசோதனை முகாம்

Report Print Akkash in அபிவிருத்தி

கொழும்பு - மாளிகாவத்தையில் பாலர் பாடசாலை மாணவர்களுக்காக இலவச கண் பரிசோதனை முகாம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில் மாளிகாவத்தையில் அமைந்துள்ள இலங்கை முஸ்லிம் மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் ஏராளமான பாலர் பாடசாலை மாணவ மாணவிகள் வருகை தந்து தமது கண்களை இலவசமாக பரிசோதனை செய்துள்ளார்கள்.

குறித்த நிகழ்வுக்கு மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய மற்றும் பல பிரமுகர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.