26 வருடங்களுக்குப் பின் விடுவிக்கப்பட்ட கலாச்சார மண்டபத்தை புனரமைக்கும் இராணுவம்

Report Print Theesan in அபிவிருத்தி

கடந்த 26 ஆண்டுகளாக படையினர் வசமிருந்த வவுனியா குடியிருப்பு கலாச்சார மண்டபம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசாவிடம் கையளிக்கப்பட்டது.

கையளிக்கப்பட்டு பல மாதங்களுக்கு மேலாகியுள்ள நிலையிலும் குறித்த கலாச்சார மண்டபம் புனரமைக்கப்படாமலும் பாதுகாப்பற்ற பகுதியாகவும், இளைஞர்களின் சட்டவிரோத செயற்பாடுகளுக்கான இடமாகவும் காணப்பட்டது.

இந்த நிலையில் குறித்த கலாச்சார மண்டபத்தை தற்போது இராணுவத்தினர் புனரமைத்து வருகின்றனர்.

இது தொடர்பில் இராணுவ பொறுப்பாளர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த 26 வருடங்களாக இந்த கலாச்சார மண்டபம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. நாங்கள் இந்த கலாச்சார மண்டபத்தினை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக வவுனியா பிரதேச செயலாளரிடம் கையளித்தோம்.

எவ்வித புனரமைப்புமின்றி காணப்பட்டமையினால் வவுனியா இராணுவத்தினரால் மீள்புனரமைப்பு செய்து மீண்டும் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசாவிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.