ஏறாவூர் அரபா வித்தியாலயத்திற்கான புதிய கட்டடம் திறந்து வைப்பு

Report Print Gokulan Gokulan in அபிவிருத்தி

ஏறாவூர் - அரபா வித்தியாலயத்திற்கான மூன்று மாடிக் கட்டடம் கிழக்கு மாகாண முதலமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதில் கிழக்கு மாகாண உறுப்பினர் ஷிப்லி பாறூக் மற்றும் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸதீன் கல்வி அதிகாரிகள் அதிபர், ஆசிரியர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது கிழக்கு மாகாண முதலமைச்சரின் சேவைகளை பாராட்டி அவரை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.