கிழக்கில் 22 இலட்சம் ரூபா செலவில் மூன்று வீதிகள் புனரமைக்கும் நடவடிக்கை ஆரம்பம்

Report Print Gokulan Gokulan in அபிவிருத்தி

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் முயற்சியால் ஏறாவூரின் மூன்று வீதிகளை புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது.

இதன் போது ஏறாவூர் புன்னைக்குடா குறுக்கு வீதி, பழைய சந்தை மூன்றாம் குறுக்குவீதி மற்றும் பழைய சந்தை ஆறாம் குறுக்கு வீதி ஆகியவற்றை புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டன.

குறித்த மூன்று வீதிகளின் புனரமைப்புக்கென கிழக்கு முதலமைச்சரினால் 22 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வின்போது, கிழக்கு மாாகண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், மாாகண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் மற்றும் முன்னாள் நகர சபை உறுப்பினர் பாஷித் அலி ஆகியோரும் பங்கேற்றனர்.