யாழில் நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டி வைத்தார் நீதிபதி இளஞ்செழியன்

Report Print Sumi in அபிவிருத்தி

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்படவுள்ள திறந்த நீதிமன்றங்களின் கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் நீதிபதிகள் சட்டத்தரணிகள் மதத்தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும், 242 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள கட்டடத்துக்கான அடிக்கல்லை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.