நீதிபதி இளஞ்செழியனின் முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்துகொண்ட இரு அரச அதிகாரிகள்

Report Print Shalini in அபிவிருத்தி

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இருவர் நொத்தாரிசுகளாக (பத்திரம் எழுதும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பணி செய்பவர்) சத்தியப்பிரமானம் செய்துகொண்டுள்ளனர்.

இதன்படி வடமாகாண ஆளுநரின் செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன் மற்றும் யாழ். மாவட்ட மேலதிக காணி அரச அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் ஆகியோரே சத்தியப்பிரமானம் செய்துகொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று அவர்கள் சத்தியப்பிரமானம் செய்துள்ளனர்.

இதில், இலட்சுமணன் இளங்கோவன் மற்றும் சுப்பிரமணியம் முரளிதரன் ஆகியோர் தமது சட்டக்கல்வியை நிறைவு செய்து உயர் நீதிமன்றில் சட்டத்தரணிகளாக சத்தியப்பிரமாணம் செய்திருந்தனர்.

இந்த நிலையில் இவர்களுக்கு நொத்தாரிசு அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கு பதிவாளர் நாயகத்தால் யாழ்.மேல் நீதிமன்றுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து இவர்கள் இருவரும் நொத்தாரிசுகளாக இன்று சத்தியப்பிரமானம் செய்துகொண்டுள்ளனர்.