கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்!

Report Print Vethu Vethu in அபிவிருத்தி

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்காக 4 மற்றும் 2 நட்சத்திர ஹோட்டல்கள் இரண்டு நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான காணியில் நட்சத்திர ஹோட்டல் நிர்மாணிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

விமான பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த சேவை ஒன்றை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

ஹோட்டல் நிர்மாணிப்பு தொடர்பில் இரு முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கான ஆலோசனை வழங்க அவர்கள் தவறியுள்ளனர்.

இந்நிலையில் வேறு முதலீட்டாளர்களிடம் அதற்கான ஆலோசனையை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய ஒரு பகுதியில் 4 நட்சத்திர ஹோட்டலும், மற்றைய பகுதியில் 2 நட்சத்திர ஹோட்டலும் நிர்மாணிப்பதற்கு தகுதியான முதலீட்டாளர்கள் தெரிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சமாதான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை பல மடங்காக அதிகரித்துள்ளது.

மேலும் பல வெளிநாட்டவர்களை கவரும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையில் பல்வேறு வகையில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.