புதுப்பொலிவு பெறப்போகும் காங்கேசன்துறை துறைமுகம்!

Report Print Murali Murali in அபிவிருத்தி

காங்கேசன்துறை துறைமுகத்தினை வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கான ஆரம்ப கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அந்த வகையில், இதற்கு தேவையான 50 ஏக்கர் காணியினை இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்துக்கு உரிய திரவியங்களை பரிமாறிக் கொள்ளும் பணியினை மேற்கொள்வதற்காக காங்கேசன்துறை துறைமுகம் ஸ்தாபிக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த துறைமுகத்தினை மறுசீரமைப்பு செய்வதற்காக முன்மொழிவுகளை இலங்கை துறைமுக அதிகார சபை முன்வைத்துள்ளது.

இதன்படி, துறைமுகத்தினை வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கான ஆரம்ப கட்டுமானங்களை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கு தேவையான 50 ஏக்கர் காணியினை இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திடம் இருந்து இலங்கை துறைமுக அதிகார சபைக்கு பெற்றுக் கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் துறைமுக மற்றும் கப்பல்துறை விவகார அமைச்சர் மஹிந்த சமரசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Latest Offers