விமான நிலையத்தில் ஏற்படும் முக்கிய பிரச்சினையை தீர்க்க புதிய திட்டம்

Report Print Shalini in அபிவிருத்தி

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்தில் 400 பயணிகள் வெளியேறும் வகையில் புதிய பயணிகள் பிரிவு கட்டடமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.

விமான நிலையத்தில் காணப்படுகின்ற நெருக்கடியான நிலையை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த கட்டடம் உருவாக்கப்படவுள்ளது.

இதன்படி, ஒரு மணித்தியாலயத்துக்கு 400 பயணிகள் வெளியேறுவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கு முடியுமான முன் பொருத்தப்பட்ட பயணிகள் பிரிவு கட்டடமொன்று அமையவுள்ளது.

இதை 2018ஆம் ஆண்டு இறுதிக்குள் நிர்மாணிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Latest Offers