குருவிச்சை மற்றும் நாச்சியார் ஆற்றுக்கான பாலம் பல மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிப்பு

Report Print Yathu in அபிவிருத்தி
42Shares

முல்லைத்தீவு - ஒட்டுச்சுட்டான் பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலங்களுக்குள் செல்கின்ற குருவிச்சை மற்றும் நாச்சியார் ஆற்றுக்கான பாலம் 3.5 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்குட்பட்ட குருவிச்சை நாச்சியார் ஆற்றுக்கான பாலம் இன்மையால் கடந்த காலங்களில் விவசாயிகள் விவசாய நிலங்களுக்கான விவசாய உள்ளீடுகளை கொண்டு செல்வதிலும், அறுவடை செய்கின்ற விளைபொருட்களை கொண்டு வருவதிலும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த ஆற்றிட்கு பாலம் ஒன்றினை அமைத்துத்தருமாறு பாதிக்கப்பட்ட விவசாயிகள் பல்வேறு தரப்புக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில், வட மாகாணசபை உறுப்பினர் ரவிகரனின் கோரிக்கையை ஏற்று வட மாகாணசபையின் முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சிபாரிசுக்கு அமைவாக திட்டம் முன்மொழியப்பட்டு 3.5 மில்லியன் ரூபா செலவில் பாலம் புனரமைக்கப்பட்டுள்ளது.