பல மில்லின் ரூபா செலவில் கிளிநொச்சியில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்

Report Print Yathu in அபிவிருத்தி
43Shares

கிளிநொச்சி மாவட்டத்தில் 8.17 மில்லியன் ரூபா செலவில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இந்த ஆண்டு கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் மூலமும் பிரமான அடிப்படையிலான மூலதன நன்கொடை வேலைத்திட்டத்தின் கீழும் மேற்படி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

புனரமைப்பு வேலைகள், உட்கட்டுமான வசதிகள், வருமான அதிகரிப்புத் திட்டத்தின் கீழான வேலைகள், உபகரணங்கள் கொள்வனவு, மகளீர் அபிவிருத்தி நிலைய புனரமைப்புக்கள், சுயதொழில் ஊக்குவிப்பு, வாழ்வாதாரம் போன்ற செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், இயக்கச்சி, மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் பொதுமண்டபத்திற்கான நீர் வழங்கல் வசதி தர்மக்கேணி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பொதுமண்டபத்திற்கு மின் இணைப்பு வழங்குதல் என பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.