புதிய 10 எண்ணெய் தாங்கிகளை அமைக்கும் பணிகள் ஆரம்பம்

Report Print Gokulan Gokulan in அபிவிருத்தி

கொழும்பு - கொலன்னாவை பெற்றோலிய எண்ணெய் களஞ்சியசாலை அமைந்துள்ள பகுதியில் மேலும் 10 புதிய எண்ணெய் தாங்கிகளை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த பணிகள் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் 11,200மெட்ரிக் தொன் கொள்ளளவுள்ள 3 எண்ணெய் தாங்கிகளும், 11,900 மெட்ரிக் தொன் கொள்ளளவு விமான எரிபொருள் தாங்கியொன்றும் உருவாக்கப்படவுள்ளன.

இதேவேளை 11,600 மெட்ரிக் தொன் டீசல் தாங்கியொன்றும், 5,800மெட்ரிக் தொன் டீசல் தாங்கிகள் மூன்றும் மற்றும் மண்ணெண்ணெய் தாங்கியொன்றும், 3,800 மெட்ரிக்தொன் டீசல் தாங்கியொன்றும் உருவக்கப்படவுள்ளன.