இலங்கையில் நிர்மாணிக்கப்படும் சொர்க்காபுரி தீவு!

Report Print Vethu Vethu in அபிவிருத்தி
998Shares

கொழும்பு பொரலஸ்கமுவ ஏரியை அபிவிருத்தி செய்து சுற்றுலா பயணிகளுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தும் இடமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

10 வருடங்களாக எவ்வித அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படாமல் உள்ள இந்த ஏரியை நவீனமயப்படுத்த நகர அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக 175 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.

இலங்கை நீர்ப்பாசன திணைக்கள நிர்வாகத்தின் கீழ் காணப்படுகின்ற பொரலஸ்கமுவ ஏரியின் மதில்கள் தொழில்நுட்ப முறையின் கீழ் அபிவிருத்தி செய்தவற்கு இலங்கை நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை எதிர்வரும் 30 நாட்களுக்குள் முழுமைப்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில் அபிவிருத்தி திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக நீர்ப்பாசன திணைக்களத்தின் முழுமையான கண்காணிப்பின் கீழ் 2.5 கிலோ மீற்றர் தூரத்திற்கு நடைப்பயிற்சி மேற்கொள்ளப்படும் இடம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.

இந்த ஏரியின் வேலைகள் நிறைவடைந்த பின்னர் அதன் மத்தியில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த தீவு போன்ற இடமாக மாற்றமடையும்.

அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஓய்வு பெறுவதற்கு தேவையான இயற்கை வளமிக்க இடமாக காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.