கொழும்பில் 3 கோபுரங்களை கொண்ட பாரிய கட்டடத்தொகுதி!

Report Print Vethu Vethu in அபிவிருத்தி

கொழும்பில் மூன்று கோபுரங்களை கொண்ட பாரிய கட்டடத்தொகுதி ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

60 மாடிகளை கொண்ட 3 கோபுரங்களை நிர்மாணிக்கும் நடவடிக்கை இந்த வருடத்தில் ஆரம்பமாகும் என நகர சபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதன் நிர்மாணிப்பு நடவடிக்கைக்காக 1000 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படவுள்ளது.

கொழும்பு நிதி நகரத்தின் முதலாவது அபிவிருத்தி திட்டமாக விகாரமஹா தேவி பூங்காவை விட 10 மடங்கு பெரிய பூங்கா ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. பூங்காவை நாட்டு மக்கள் அனைவரும் பயன்படுத்த முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

60 மாடிகளை கொண்ட 3 கோபுரங்களின் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் இந்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன் ஊடாக சர்வதேச முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.