2020ஆம் ஆண்டை இலக்காக கொண்டு தெங்கு உற்பத்தி!

Report Print Nivetha in அபிவிருத்தி

2018தொடக்கம் 2020ஆம் ஆண்டை இலக்காக கொண்டு தெங்கு உற்பத்திக்கான திட்டம் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாக தெங்கு உற்பத்தி சபை அறிவித்துள்ளது.

கடந்த 2 வருடங்களுக்கு மேலாக நிலவும் கடும் வறட்சியின் காரணமாக தெங்கு அறுவடை 2ஆயிரத்து 300 மில்லியன் ரூபாவாக குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 3 ஆயிரம் மில்லியன் ரூபாவிற்கு மேலதிகமாக பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனால், தெங்கு முக்கோணப்பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர நிலப்பரப்பில் உள்ள தெங்கு உற்பத்தி அறுவடையை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் தெங்கு உற்பத்தி சபையின் உதவி முகாமையாளர் டப்லியூ.ஏ.எச்.சேனாரத்தன குறிப்பிட்டுள்ளார்.