எதிர்வரும் பெப்ரவரி மாதம் மக்களிடம் கையளிக்கப்படவுள்ள அழகான கொழும்பு

Report Print Evlina in அபிவிருத்தி

கொழும்பு - பேர வாவியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை மக்கள் பாவனைக்காக எதிர்வரும் பெப்ரவரி மாதம் திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேர வாவியின் சுற்றுப் பாதையில், ‘லேக் ஹவுஸ்’ முதல் தாமரைக் கோபுரம் வரையிலான பகுதியே மக்களிடம் கையளிப்படவுள்ளது.

‘அழகான கொழும்பு’ என்ற, தலைநகரை அழகாக்கும் முயற்சியின் ஒரு வேலைத்திட்டமாகவும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஊக்குவிக்கும் வகையிலும் நகர அபிவிருத்தி அதிகார சபை குறித்த நடைபாதையைத் திறந்து வைக்கவுள்ளது.

இதேவேளை நகர அபிவிருத்தியில் இரண்டாவது வேலைத்திட்டமாக வொக்ஸோல் வீதி முதல் தாமரைக் கோபுரம் வரையிலான நடைபாதை அமைக்கும் பணி விரைவில் ஆரம்பமாகும் என நகர அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.