மீண்டுமொரு மேம்பாலம் சற்றுமுன் திறந்து வைப்பு

Report Print Sujitha Sri in அபிவிருத்தி
மீண்டுமொரு மேம்பாலம் சற்றுமுன் திறந்து வைப்பு

நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் பொல்கஹவெல மேம்பாலம் சற்றுமுன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ள குறித்த மேம்பாலம் 353 மீற்றர் நீளமானது என தெரிவிக்கப்படுகிறது.

ஸ்பெயின் நாட்டு அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட இந்த மேம்பாலமானத்தின் நிர்மாணத்திற்காக 200 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் நிலவும் வாகன நெரிசலை குறைத்துக் கொள்ளும் நோக்கில் இந்த மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இராஜகிரியவில் அமைக்கப்பட்ட இலங்கையின் மிகவும் நீளமான மற்றும் பெரியதுமான மேம்பாலம் கடந்த எட்டாம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.