தெற்காசியாவில் மிக சிறந்த வைத்தியசாலைகளில் ஒன்றாக கொழும்பு தெரிவு

Report Print Vethu Vethu in அபிவிருத்தி

தெற்காசியாவில் உள்ள சிறந்த 3 வைத்தியசாலைகளில் தெஹிவளை போதனா வைத்தியசாலையான களுபோவில வைத்தியசாலை உள்ளடக்கப்பட்டுள்ளது.

மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் பிரிவு உள்ளடக்கப்பட்ட சிறந்த 3 வைத்தியசாலைகளுக்குள் இந்த வைத்தியசாலை இடம்பிடித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசரியரும், களுபோவில வைத்தியசாலையின் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் பிரிவு வைத்தியர் தம்மிக்க சில்வா,

மகப்பேறியல் தொடர்பில் அனைத்து சத்திர சிகிச்சைகளும் மேற்கொள்ளும் பயிற்சி மற்றும் வசதிகள் களுபோவில வைத்தியசாலையில் காணப்படுகின்றது.

“சாத்தியமற்றது இல்லை” என்ற தலைப்பின் கீழேயே களுபோவில வைத்தியசாலையின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.