போக்குவரத்து துறையில் ஏற்படும் மாற்றம்! மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகள் சேவையில்

Report Print Murali Murali in அபிவிருத்தி

பொது போக்குவரத்து சேவையை மேற்படுத்தும் நோக்கில் மின்சாரத்தில் இயங்கும் 50 பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த பேருந்துகள் இலங்கை போக்குவரத்து சபைக்காக கொள்வனவு செய்யப்படவுள்ளதுடன், கொழும்பு நகரில் Bus Rapid Transit System ஒன்றும் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

இது குறித்து போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது 6300 பேருந்துகள் இயங்குகின்ற நிலையில், அவற்றில் 2467 பேருந்துகள் 10 வருடங்களுக்கு மேற்பட்ட பழமையான பேருந்துகளாகும்.

இந்நிலையில், இலங்கை போக்குவரத்து சபைக்கு 7257 பேருந்துகள் தேவைப்படுவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். மேலும் தற்போது 100 வீதம் டீசல் பேருந்துகளே இயங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே, பொது போக்குவரத்து சேவையை மேற்படுத்தும் நோக்கில் மின்சாரத்தில் இயங்கும் 50 பேருந்துகளை கொள்வனவு செய்யவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers