சீனா போன்று ஏனைய நாடுகளும் இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வம்

Report Print Kamel Kamel in அபிவிருத்தி

சீன முதலீடுகளினால் ஏனைய நாடுகளும் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாக அபிவிருத்தி தந்திரோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பாரியளவில் சீனா முதலீடு செய்து வருவதனால் ஏனைய நாடுகளும் இலங்கையில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற முதலீட்டு மாநாடு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவி வரும் பொருளாதார மறுமலர்ச்சி காரணமாக பல நாடுகள் முதலீடு செய்வதில் நாட்டம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.