விரைவில் வடக்கு, கிழக்கில் 6500 கல்வீடுகள்

Report Print Sujitha Sri in அபிவிருத்தி

வடக்கு மற்றும் கிழக்கில் பொருத்து வீடுகளுக்கு பதிலாக 6500 கல்வீடுகள் அமைக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அண்மையில் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவின் இணைவில் கூட்டமென்று நடைபெற்றுள்ளது.

மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளரின் ஏற்பாட்டில் அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற குறித்த கூட்டத்திலேயே சீன நிறுவனத்தின் உதவியுடன் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மாதம் 19ஆம் திகதி சீன நிறுவனத்தின் உதவியுடன் பதுளையில் அமைக்கப்பட்ட வீடுகளை பார்வையிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழு விஜயம் செய்யவுள்ளது.

இதேவேளை குறித்த கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீநேசன் மற்றும் யோகேஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.