இலங்கையில் பிரமாண்டமான கனவு தீவு!

Report Print Vethu Vethu in அபிவிருத்தி
இலங்கையில் பிரமாண்டமான கனவு தீவு!

இலங்கையில் கனவு தீவு ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலுக்கு அருகில் கனவு தீவு நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்காக 250 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளது.

இது முழுமையான தனியார் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Ice Park and Colombo Eye என்ற பெயரில் அழைக்கப்படும் சுழலும் சக்கரத்திற்கு 500 மில்லியன் ரூபாய் செலவாகும் எனவும், அதனை தனியார் நிறுவனம் ஒன்று பொறுப்பேற்றுள்ளதாகவுதம் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தவிர ரோலர் கோஸ்டர் மற்றும் பல பொழுதுபோக்குகள் அம்சங்கள் இந்த கனவு தீவில் நிறுவப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.