தெற்கு அபிவிருத்தி வேலைத் திட்டம் அடுத்த மாதம்! பிரதமர் அறிவிப்பு

Report Print Murali Murali in அபிவிருத்தி

தெற்கு அபிவிருத்தி வேலைத்திட்டத்தை அடுத்த மாதம் வெளியிடப் போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது பிரதமர் இதனை தெரிவித்தார். தெற்கு அபிவிருத்தியின் பிரதான அபிலாஷை கைத்தொழில் மயமாயக்கலாகும்.

இதற்கமைய கொழும்புக்கு அடுத்தபடியாக சிறப்பாக திகழக்கூடிய கைத்தொழில் மயமாக்கத்திற்கு வித்திடப்போவதாக பிரதமர் கூறினார்.

ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக காலி, மாத்தறை பிரதேசங்களில் பாரிய அபிவிருத்தி வலயங்கள் ஏற்படுத்தப்படும். சிங்கராஜவனமும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

தெற்கு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் பெருந்தோட்டத்துறையிலும், விவசாயத்துறையிலும் இதுவரை காணாத அபிவிருத்தி ஏற்படுத்தப்படுமென பிரதமர் குறிப்பிட்டார்.