மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்ட பணிகளுக்கு உதவும் ஜப்பான்

Report Print Ajith Ajith in அபிவிருத்தி

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகளை ஜப்பான் மேற்கொள்ள உள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 3ஆம் கட்டமான பொதுஹர தொடக்கம் ரம்புக்கன ஊடான கலகெதர வரையான 32.5 கி.மீ. நீளமான வீதி நிர்மாணிக்கப்படவுள்ளது.

இந்தப் பணிகளுக்காக 100 பில்லியன் ஜப்பான் யென் நிதியினை வழங்குவதற்கு ஜப்பானின் டொகியோ மிட்சுபி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், குறித்த ஒப்பந்தத்தினை ஜப்பானின் M/s Taisei Corporation நிறுவனத்துக்கு வழங்கப்பட உள்ளது.

இது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Latest Offers

loading...