புலிகளால் உருவாக்கப்பட்ட தொழிற்சாலையை மீண்டும் திறந்து வைத்த வடமாகாண அமைச்சர்

Report Print Shalini in அபிவிருத்தி
புலிகளால் உருவாக்கப்பட்ட தொழிற்சாலையை மீண்டும் திறந்து வைத்த வடமாகாண அமைச்சர்

தமிழீழ விடுதலைப்புலிகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த ஜெகசோதி புற்பாய் தொழிற்சாலை இன்று மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண மகளிர் மற்றும் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் அனந்தி சசிதரனால் வைபவ ரீதியாக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ். வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வாதரவத்தை பகுதியில் குறித்த தொழிற்சாலை அமைந்துள்ளது.

இந்த நிகழ்வில் வடமாகாண மகளிர் விவகாரம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் அனந்தி சசிதரன், யாழ்.மாவட்ட செயலக அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், கிராம அலுவலர், பயிற்சி நிலைய உத்தியோகத்தர்கள், வாதரவத்தை கிராம மக்கள் மற்றும் பொது அமைப்புகள் என பலர் கலந்து கொண்டனர்.